சொத்துவரி, குடிநீர்க் கட்டணம் செலுத்த வேண்டுகோள்

ஆத்தூர் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர்க் கட்டணம் செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

Update: 2024-02-16 17:57 GMT
ஆத்தூர் நகராட்சி

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி பொதுமக்கள் சொத்துவரி, குடிநீர்க் கட்டணம் ஆகியவற்றை செலுத்துமாறு ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் 2023-24-ஆம் ஆண்டுக்கான சொத்து வரி, தொழில்வரி, குடிநீர்க் கட்டணம், இதர வரி இல்லா இனங்களை வசூல் செய்யும் பணி அலுவலர்கள், பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள், வணிக பெருமக்கள், தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் உடனடியாக செலுத்தி,

ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு நகராட்சி ஆணையர் அ. வ. சையத் முஸ்தபா கமால் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News