திருஆவினன்குடி கோயிலில் காலணிகள் மாயமாவதை தடுக்க கோரிக்கை
திருஆவினன்குடி கோயிலில் காலணிகள் மாயமாவதை தடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-01-29 15:18 GMT
தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலுக்கு செல்வது வழக்கம்.
தவிர, உள்ளூர் பக்தர்களும் இக்கோயிலுக்கு அதிகளவு செல்கின்றனர். இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது காலணிகளை பாதுகாப்பாக வைப்பதற்காக தெற்கு பகுதியில் காலணி பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது இம்மையம் பஞ்சாமிர்த விற்பனை மையமாக மாறி உள்ளது. கோயில் நிர்வாகம் திருஆவினன்குடி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் இக்கோயில் பகுதியில் காலணி பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.