மயானத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்ற கோரிக்கை

வேலூர் அருகே மயானம் ஆக்கிரமிப்பு செய்தவர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-02-19 12:26 GMT

மனு அளித்த வழக்கறிஞர்கள்

விருபாட்சிபுரம் இந்து அருந்ததியர் மயானம் ஆக்கிரமிப்பு செய்தவர்களை உடனடியாக அகற்ற வேண்டும். என பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் விருப்பாச்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள இந்து அருந்ததியர் மயானம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்துள்ளதாக கடந்த 31 -07- 2023 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆட்சியர் உத்தரவின் பேரில் இந்த மயான இடத்தை நில அளவையர் நிலத்தை அளந்து வேலியிட முயன்ற பொழுது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த இடத்தை அகற்றக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அருந்ததியர் மயானத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அகற்றிடவும் சுற்றுசுவர் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News