ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற கோரிக்கை
உளுந்துார்பேட்டையில் விருத்தாச்சலம் சாலை சந்திப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதால் பரபரப்பு.;
By : King 24x7 Angel
Update: 2024-01-31 11:41 GMT
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற கோரிக்கை
உளுந்துார்பேட்டையில் விருத்தாச்சலம் சாலை சந்திப்பு பகுதியில் டீக்கடை உள்ளது. இந்த டீக்கடைக்கு முன்பாக சாலை பகுதியில் பஜ்ஜி, சிக்கன் ரைஸ் உள்ளிட்ட உணவு கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. மேலும், வாகனங்கள் சாலையில் நிற்பதால் , அவ்வழியே வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து நகராட்சி கமிஷனர் இளவரசன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் நேற்று மதியம் 1 மணியளவில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி ஊழியர்கள் கூறியதால், கடை வைத்திருந்தவர்களுக்கும் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.