திருவள்ளூரில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை
திருவள்ளூரில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி சாராட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-20 12:59 GMT
ஜமாபந்தியில் மனு அளிப்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் மெதூர் 3ல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் இளைய மணி முறையாக பணிக்கு வருவதில்லை பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தாலும்,
உரிய நடவடிக்கை எடுப்பதில்லை கடந்த 10 ஆண்டுகள் ஆக விடதண்டலம் பகுதியில் குண்டும் குழியுமாக குளம் போல் மாறிய சாலை தற்போது வரை சீரமைக்கப்படவில்லை எனவும்,
சுமார் 5 கோடி மதிப்பிலான அரசு இடங்கள்மழைநீர் கால்வாயை மீட்க வேண்டும் எனவும் வருவாய் தீர்வாய் அலுவலர் சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் அவர்களிடம் மனு அளித்தனர் . அரசு இடத்தை மீட்டு சாலை அமைக்க உரிய தீர்வு காண்பதற்கு சார் ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.