கோயம்புத்தூர் ரயில் சேவையை மீண்டும் தொடங்க கோரிக்கை!

தூத்துக்குடி - கோயம்புத்தூர் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. 

Update: 2024-04-30 00:39 GMT

பைல் படம்

தூத்துக்குடி - கோயம்புத்தூர் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.  இது தொடர்பாக எம்பவர் இந்தியா கெளரவ செயலாளர் ஏ.சங்கர் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள மனுவில், "எம்பவர் இந்தியா என்பது கடந்த 33 ஆண்டுகளாக அடித்தட்டு சமூகங்களில் பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்பாகும். UNEP & UNCCD அங்கீகாரம் பெற்றது மற்றும் தமிழ்நாடு அரசாங்கத்தின் சிறந்த நுகர்வோர் VCO விருதைப் பெற்றது.

UN ECOSOC உடன் சிறப்பு அந்தஸ்தும் உள்ளது. தூத்துக்குடி ரயில் பயணிகளுக்காக பின்வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறோம். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி - கோயம்புத்தூர் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும். தூத்துக்குடி - சென்னை வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்க வேண்டும். ஏற்கனவே ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தூத்துக்குடி - மேட்டுப்பாளையம், தூத்துக்குடி - பாலருவி, மற்றும் தூத்துக்குடி - பாலக்காடு ஆகிய ரயில் சேவைகளை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்

Tags:    

Similar News