தம்மம்பட்டி- கருமந்துறைக்கு மீண்டும் பேருந்து இயக்க கோரிக்கை

கரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட தம்மம்பட்டி- கருமந்துறை பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-06-13 04:37 GMT

பைல் படம் 

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து, கருமந் துறைக்கு, தினசரி காலை 7.10 க்கு, தம்மம்பட்டி பணிமனையிலிருந்து அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்து, ஆரியபாளையம், பெருமா பாளையம், புத்திரக்கவுண்டம்பாளையம்,ஏத்தாப்பூர், பனைமடல், தும்பல் வழியாக கருமந்துறை வரை சென்று வந்தது. இதனால், தம்மம்பட்டி பகுதி யில் இருந்து கருமந்துறை செல்லும் வழியில் உள்ள ஊர்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், குறித்த நேரத்திற்கு அலுவலகங்களுக்குச் சென்றனர்.

இந்தப் பேருந்து சேவையால், தினசரி ஏராளமானோர் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், இந்தப் பேருந்து, கரோனா தொற்று காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது. அதன்பின் அனைத்துப் பேருந்துகளும் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தம்மம்பட்டியில் இருந்து கருமந்துறைக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து, மீண்டும் இயக்கப்பட வில்லை. இதனால், அந்தப் பேருந்து சேவை மூலம் பயனடைந்த ஆசிரியர்கள், மின்வாரிய ஊழியர்கள், மாணவர்கல் உள்ளிட்டோர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, தம்மம்பட்டி கிளை நிர்வாகத்திடம், பலமுறை கோரிக்கை விடுத்தும், கருமந்துறைக்கு பேருந்து இயக்க எந்தவித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன்கருதி, நிறுத்தப்பட்டுள்ள கருமந்துறை பேருந்தை மீண்டும் இயக்க தம்மம்பட்டி அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News