கோரிக்கை வைத்த மக்கள் - நிறைவேற்றிய சி.என் அண்ணாதுரை எம்.பி

திருப்பத்தூர் அருகே கருப்பனூர் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதியதாக கட்டப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான அஞ்சல் அலுவலகம் மற்றும் ரூ.18.55 லட்சம் மதிப்பிலான மேல் நீர்தேக்க தொட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது,

Update: 2024-06-25 05:03 GMT

மேல் நீர்தேக்க தொட்டி திறப்பு விழா  

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பனூர் பகுதியில் உள்ள இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை அஞ்சல் அலுவலகம் இல்லை என கூறப்படுகிறது. மேலும் கிராமமக்களின் நலனை கருத்தில் கொண்டு அஞ்சல் அலுவலகம் கட்டி தர வேண்டும் என அப்பகுதிமக்கள் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு வைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த மனு பரிசிலனை செய்யப்பட்டு நேரில் பார்வையிட்டு பின்னர் நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியான பல்நோக்கு நிதியிலிருந்து புதியதாக ரூபாய் 5 லட்சம் மதிப்பில் கருப்பனூர் பகுதியில் அஞ்சல் அலுவலகம் கட்டப்பட்டது. அதேபோல் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ. 18.55 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதியதாக கட்டப்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் மேல்நீர்த்தேக்க தொட்டியை கருப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், அண்ணான்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் ,சின்ன வெங்காயப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்த நிகழ்வின் போது திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் என பலரும் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News