கன்னியாகுமரி : வீட்டை விட்டு வெளியேறிய 3 மாணவிகள் மீட்பு

சமூகவலைதங்கள் மூலம் நட்பான மூவரும் விடுமுறையை கொண்டாட வீட்டை விட்டு வெளியேறியது விசாரணையில் தெரியவந்தது

Update: 2023-12-24 06:00 GMT
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கடமலைக்குன்று  பகுதியில் இன்று காலை  3 இளம் பெண்கள் நின்று கொண்டிருப்பதாக தக்கலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  போலீசார் அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணனாக பேசியதால், பெண் போலீசார் துணையுடன் 3 பேரையும்  தக்கலை போலீஸ் நிலையம்  அழைத்து செல்லப்பட்டனர். அங்கு நடத்திய விசாரணையில் மூன்று பேரில் ஒருவர் கோழிப்போர் விளை பகுதி +2  மாணவி எனவும்,  மற்றவர்கள்  ஈத்தவிளை, குழிக்கோடு  பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்தது. இதில் ஒருவர்  திருவனந்தபுரத்தில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்துள்ளார். பிளஸ் டூ மாணவிகளான இவர்கள் மூன்று பேரும் சமூகவலைத்தளம் மூலம் நட்பாகி உள்ளனர். அந்தப் பழக்கத்தில் விடுமுறையை பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொண்டாட வீட்டிலிருந்து மூன்று பேரும் யாருக்கும் தெரியாமல் வெளியேறி இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, பெற்றோரிடம் மூன்று மாணவிகளை அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News