கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு
கெங்கவல்லி அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 15:21 GMT
பசுமாடு
கெங்கவல்லி:சேலம், கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட ஒதியத்தூர் ஊராட்சியில் இன்று துரைசாமி என்பவரின் விவசாய தோட்டத்தில் அவருக்கு சொந்தமான பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கிணற்றில் விழுந்துவிட்டது. தகவலறிந்து வந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலை அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான வீரர்கள் மாட்டை உயிருடன் மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்.