கால்வாயில் தொழிலாளி பிணமாக மீட்பு

ஆற்காடு பகுதியைச் சேர்ந்த வாலிபரின் உடல் கால்வாயில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-05-24 10:11 GMT

சடலம் மீட்பு 

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள சாத்தூர் காந்திநகர் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் வெங்கடேசன் (50) கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மகேஷ்வரி (43) என்பவருடன் திருமணம் ஆகி வாழ்ந்து வந்துள்ளார்.

திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை நேற்று முன்தினம் காலை கலவை மருத்துவமனைக்கு மருத்துவம் பார்த்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்ற வெங்கடேசன் வீடு திரும்பாததால் உறவினர்கள் நேற்று முன்தினம் மதியம் முதல் இரவு வரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

Advertisement

இந்த நிலையில் அகரம் பகுதியில் திமிரி சாலையில் உள்ள வெள்ளம்பி ஏரி பாசன கால்வாயில் அவர் பிணம் கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் கலவை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கலவை சப்-இன்ஸ்பெக்டர் சூரியா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக அவரது மனைவி மகேஷ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த வெங்கடேசன் கால்வாயில் பிணமாக மீட்கபட்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News