வெளிநாட்டில் சிக்கிய நாகை தொழிலாளர்கள் மீட்பு
வெளிநாட்டில் வேலைக்குச் சென்று அவதிப்பட்ட இரண்டு நபர்கள் மீட்பு, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் துரித நடவடிக்கையால் உடனடியாக சொந்த ஊருக்கு வரவழைக்கப்பட்டனர்
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் உட்கோட்டம், தைலவனம் ல், தெற்கு தெருவை சேர்ந்த கருணாகரன்(24) த/பெ ஹரிகிருஷ்ணன் மற்றும் சத்ய பிரகாஷ் (27) த/பெ ரவிச்சந்திரன், அரவங்காடு தென்னம்புலம் வேதாரணியம் ஆகிய இரண்டு நபர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து துபாய் அபுதாபிக்கு கடந்த நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுள்ளனர். வேலைக்கு சென்ற இடத்தில் தங்களுக்கான சரியான ஊதியமும் நிரந்தர வேலையும் கொடுக்கப்படவில்லை எனும் தங்களை கடுமையாக வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள் எனவும் தங்களுடைய பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு தங்கள் சொந்த ஊரு செல்வதையை தடை செய்தார்கள் எனவும் தங்களை எப்படியாவது சொந்த ஊருக்கு அழைத்து வரும்படி அவர்களின் உறவினர்களிடம் கூறியுள்ளார்கள்.
இதை அடுத்து அவர்களின் உறவினர்களான அண்ணன் மற்றும் தந்தை இரண்டு நபரும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தஹர்ஷ் சிங் கை நேரில் சந்தித்து புகார் அளித்தார்கள். புகார் மனுவை பெற்றுக் கொண்ட நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விசாரணையை விரைந்து நடத்து உத்தரவு விட்டதின் பெயரில் விசாரணை விரைந்து முடித்து நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையின் முயற்சியின் பேரில் வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட இரண்டு நபர்களும் உடனடியாக மீட்கப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களையும் நேரில் அழைத்து ஆறுதல் கூறியதுடன் வெளிநாட்டில் ஏற்படும் வேலை சிக்கல்களைப் பற்றி சில அறிவுரைகள் கூறினார்கள்.