தூத்துக்குடியில் மீட்பு பணிகள் - கூடுதல் செயலர் எஸ்.கே.பிரபாகர் பேட்டி

Update: 2023-12-20 04:36 GMT

கூடுதல் செயலர் எஸ்.கே.பிரபாகர் 

தூத்துக்குடியில் கூடுதல் செயலர் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி,ஆகியோர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில். தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு அதிகமாகதான் உள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே இரயிலில் சிக்கி தவித்து 500-பயணிகளில் 300-பயணிகள் வரை மீட்டுள்ளோம். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

Advertisement

மழை வெள்ள பாதிப்பில் இறப்பு என்பது தூத்துக்குடி,நெல்லை மாவட்டங்களில் இருக்கின்றது. ஆனால் அது மழை வெள்ளதால்தானா அல்லது வேறு காரணங்களினாலா என்று விசாரணை-க்கு பின்புதான் தெரியும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 27-நிவாரணமுகாம் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு மழை வெள்ள பாதிப்பில் சிக்கிய பலரை மீட்டு அவர்களுக்கு தேவையான உணவு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மீட்பு பணிக்காக இந்திய துணை ரானுவம்,என்.டி ஆர்.எப்,போலீஸ் போன்றவர்கள் களத்தில் உள்ளனர்.

அதைபோல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களி இருப்பவர்களை மீட்க படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் மழை வெள்ள பாதிப்பு பணிகளுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த ஐ .ஏ.எஸ் ஐபி எஸ் அதிகாரிகள் தூத்துக்குடி மாவட்டதிற்கு வந்துள்ளனர்.

மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இயல்பு திரும்ப இரண்டு மூன்று தினங்கள் ஆகும் தேங்கிய மழை நீரை அகற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளை பொறுத்தவரையில் இப்போதைக்கு தொடங்க வாய்ப்பு இல்லை மழை நீர் முழுமையாக அகற்றபட்ட பின்னர் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்று கூறினர்.

Tags:    

Similar News