குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம்

கன்னியாகுமரியில் கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

Update: 2024-05-22 10:18 GMT

கன்னியாகுமரியில் கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.


குமரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வருகிற 27-ந் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ள நிலையில் இன்றும் 4-ம் நாளாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.  பல பகுதிகளில்    இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அந்த பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில்  அதிக பட்சமாக 84.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.        திற்பரப்பு பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்று 4-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கோதை ஆறு, தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

நாகர்கோவில் நகரப் பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளில் இருந்து வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக ரப்பர் பால் உற்பத்தி, செங்கல் உற்பத்தி போன்றவை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். செண்பகராமன்புதூர், தோவாளை பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News