ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனர் தர்ணா
வீடு கட்டும் சங்கத்தில் பணம் கொடுத்தும் வீடு கட்டி தராததை கண்டித்து ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனர் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.;
Update: 2024-03-12 04:19 GMT
ஓட்டுனர் ராஜேந்திரன்
உறையூர் பனிக்கன் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனர் ராஜேந்திரன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் வீடு கட்டும் சங்கத்தில் உறுப்பினராகி வீடு கட்டும் இடத்திற்கான பணத்தை கொடுத்தேன் ஆனால் தற்போது வரை வீடு கட்டி கொடுக்கவில்லை. இது குறித்து பல வருடங்களாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.