ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மனைவி,மகள்கள் மாயம்!!
கன்னியாகுமரி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மனைவி, மகள்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2024-04-07 05:53 GMT
ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மனைவி,மகள்கள் மாயம்
நித்திரவிளை அடுத்த எஸ்டி மாங்காடு பகுதியை சார்ந்தவர் கிறிஸ்டோபர் .ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி அகிலா.இந்த தம்பதிக்கு 12 மற்றும் 10 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். சம்பவத்தன்று மாலை மீண்டும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அகிலா தனது இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். ஆனால் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கிறிஸ்டோபர் நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் இன்று வழக்குப்பகுதிவு செய்த போலீசார் ராணுவ வீரரின் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை தேடி வருகின்றனர்.