அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓய்வூதிய நாள் விழா

செங்கல்பட்டில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓய்வூதிய நாள் விழா நடைபெற்றது.;

Update: 2023-12-27 11:14 GMT

பகத்சிங் நாடகம்

செங்கல்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் செங்கல்பட்டில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓய்வூதிய நாள் விழா நடைபெற்றது.மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. பழைய ஓய்வூதியத்தை திரும்ப பெறுதல், 8-வது ஊதியக்கழுவின் 21 மாத நிலுவை தொகையினை பெற்றிடுதல் ஊதிய முரண்பாடுகளை களைந்திடுதல், கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள அகவிலை படியினை பெற்றிடுதல் உள்ளிட்ட பல்வேறு நிலுவை நிறைவேற்றிட அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

Advertisement

இவ்விழாவில் செங்கை நாடகக்குழு சார்பில் பகத்சிங் நாடகம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஓவியக்கவி வீரமணி பெரியார் வேடமிட்டு தத்ரூபமாக நடித்தார். மேலும் இந்நிகழ்வில் சதுரங்கப்போட்டி, ஓவியப்போட்டி, நடைபெற்றது. இதில் மணிவண்ணன், இளஞ்செழியன், பாலசுப்பிரமணியன், சுப்ரமணியன், எட்டியப்பன், மற்றும் எல்லன் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News