தூத்துக்குடியில் வருவாய்த்துறை ஊழியர்கள் 8வது நாளாக போராட்டம்!

தூத்துக்குடியில் வருவாய்த்துறை ஊழியர்கள் 8வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதால் வருவாய் துறை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-05 11:27 GMT

தூத்துக்குடியில் வருவாய்த்துறை ஊழியர்கள் 8வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதால் வருவாய் துறை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.


தமிழக முழுவதும் வருவாய்துறை ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மற்றும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 8வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் துறை பிரிவு மற்றும் மாவட்டத்தின் 10 தாலுகா அலுவலகத்தில் உள்ள வருவாய் துறை ஊழியர்கள் முற்றிலுமாக பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஞானராஜ் தலைமையில் வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் தமிழக அரசு உடனடியாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கண்டன கோஷங்களை எடுப்பினர்.

தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் சென்னையில் உள்ள வருவாய் துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். வருவாய்த்துறை அலுவலர்களின் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வருவாய் துறை பிரிவுகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதன் காரணமாக பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மனுக்கள் ஆகியவை தீர்க்கப்படாமல் தேங்கியுள்ளன.

Tags:    

Similar News