ராணிப்பேட்டையில் வருவாய்த்துறை அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டம்
ராணிப்பேட்டையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டம் ஈடுப்பட்டனர்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் அதிகாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் இந்த போரட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து பங்கேற்று வருகின்றனர்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிக்கு முழுமையாக நிதி ஒதுக்க வேண்டும், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு ஆணையை வெளியிட வேண்டும், இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின்படி விதிதிருத்த ஆணையை வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும், உங்கள் ஊரில் உங்களைத் தேடி உன் மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களின் முகவரி போன்ற திட்ட பணிகளை மேற்கொள்ள கால அவகாசம் வழங்குவதோடு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.