பட்டுக்கோட்டையில் இன்று வருவாய் தீர்வாயம் துவக்கம்

பட்டுக்கோட்டையில் இன்று வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது.

Update: 2024-06-13 03:15 GMT

பைல் படம் 

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி), அனைத்து வருவாய் கிராமங்களிலும், கிராம நிர்வாக அலுவலர்களால்  பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்யும் பொருட்டு, தஞ்சாவூர், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை, மாவட்ட வருவாய் அலுவலர்  தலைமையில், ஜூன் 13ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது  இந்த முகாம் ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு தொடங்கும்.

குறிச்சி சரகம் (இன்று) ஜூன் 13ஆம் தேதி, திருச்சிற்றம்பலம் சரகம் 14ஆம் தேதி, அதிராம்பட்டினம் சரகம் 18 ஆம் தேதி, தம்பிக்கோட்டை சரகம் 20ஆம் தேதி, நம்பிவயல், பெரியகோட்டை சரகம் 21ஆம் தேதி, துவரங்குறிச்சி சரகம் 25ஆம் தேதி, மதுக்கூர் சரகம் 26 ஆம் தேதி, ஆண்டிக்காடு சரகம் 27ஆம் தேதி, பட்டுக்கோட்டை சரகம் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளது.  பொதுமக்கள் தங்களது மனுக்களை, முதல்வரின் முகவரி என்னும் இணையதளத்தில் இணைய வழியாக cmhelpline-dashboard.tnega என்ற இணையதள முகவரியிலோ அல்லது இ - சேவை மையங்களின் மூலமாகவோ, வருவாய் தீர்வாயத்தில் மனுக்களை பதிவு செய்ய வேண்டும். வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும்" என பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் த.சுகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News