சாலை வளைவில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்களால் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலை வளைவுகளில், சிதறிக் கிடக்கும் ஜல்லி கற்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2024-05-28 04:43 GMT

காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலை வளைவுகளில், சிதறிக் கிடக்கும் ஜல்லி கற்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.


காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழி சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், பரமேஸ்வரமங்கலம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், தார்ச்சாலையோரம் எம்.சாண்ட் கொட்டி பேவர் பிளாக் கற்களை அடுக்கி, சாலையின் இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பள்ளூர் விருதசீர நதி குறுக்கே செல்லும் உயர்மட்ட தரைப்பால சாலை வளைவில், ஜல்லிகற்கள் சிதறிக்கிடக்கிறன. இதனால், பள்ளூர் சாலை வளைவில், ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்தும்போது, ஜல்லி கற்கள் மீது ஏறி, வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, காஞ்சிபுரம்- - அரக்கோணம் சாலை வளைவுகளில், சிதறிக் கிடக்கும் ஜல்லி கற்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News