நெல்லையில் ஆசிரியர்கள் சாலை மறியல்
நெல்லையில் ஆசிரியர்களின் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.;
Update: 2024-07-03 14:40 GMT
நெல்லையில் ஆசிரியர்களின் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அரசாணை 243 ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லையில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. கலந்தாய்வு நடைபெறும் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பேரணியாக வந்து திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.