போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்ட போது காவல்துறைக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2024-01-11 11:27 GMT
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல் 

தமிழகத்தில் அரசு போக்குவரத்து தொழி்ல் சங்கங்கள் சார்பாக 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு ஏராளமான அரசு போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வராததால் தற்காலிக பணியாளர் களை கொண்டு 90 சதவீத பேருந்து கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அரசு போக்கு வரத்துதுறை அதிகாரிகள் தற்காலிக பணியாளர்களை கொண்டு அரசு பேருந்துகளை இயக்குவதை கண்டித்தும் தமிழக முதல்வர் போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை உடனடியாக பேசி தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி இரண்டாவது நாளாக இன்று வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில்,  விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு சி ஐ டி யு தலைமையில் அதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சார்ந்த போக்குவரத்து துறை ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து துறை ஊழியர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து துறை ஊழியர்களை காவல் துறை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Tags:    

Similar News