மலைப்பாதையில் சாலை போடும் பணி - போக்குவரத்து பாதிப்பு !
கடம்பூர் மலைப்பாதையில் சாலை போடும் பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-03 06:54 GMT
போக்குவரத்து பாதிப்பு
கடம்பூர் மலைப்பாதையில் சாலை போடும் பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கே.என் பாளையத்தில் இருந்து கடம்பூர்க்கு மலைப்பாதை செல்கிறது. இந்த சாலை பழுதடைந்து காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க வாகன ஒட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
தற்போது, இந்த சாலை போடும் பணி, நடந்து வருகிறது. சாலை சீரமைப்பு பணியினால் இந்த வழித்தடத்தில், மேற்கொண்டு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாகன ஒட்டிகள், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக மலைப்பாதை செல்வதால் வனவிலங்குகள் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வாகனங்கள் விரைந்து முடிக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்