பல்லாங்குழி சாலை சீரமைக்கப்படுமா?

விராலிமலை அருகே சேதமடைந்துள்ள வேலூர் - புதுப்பட்டி சாலையை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-28 04:24 GMT

சேதமடைந்துள்ள சாலை

விராலிமலை ஒன்றியம் வேலூரில் இருந்து புதுப்பட்டி செல்லும் தார்சாலை சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக சிதிலமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சாலை இருபுறமும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் சாலையின் வழியாக செல்லும் மாணவ மாணவிகள் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சாலை அவல நிலை குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது மழை பெய்து வருவதால் சாலை பள்ளங்களின் மழை நீர் தேங்கி மேலும் சகதிமாக மாறிவிடுகிறது. சாலையை சீரமைக்கவும் முள் செடிகளை வெட்டி அகற்றவும் அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
Tags:    

Similar News