தொடர் மழையால் சேதமான சாலை - சீரமைக்க கோரிக்கை
Update: 2023-11-23 08:11 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்துவருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் 70 மி.மீ சராசரி மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக ஏர்வாடி ஊராட்சி சேர்மன் தெரு சாலையில் காட்டுப் பள்ளிவாசல் தெரு மண்ணரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சாலைகளை உடனடியாக சீர் செய்யுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.