தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சாலை மறியல்!

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.

Update: 2024-02-17 10:39 GMT
கழிப்பறைக்கு பத்து ரூபாய் இரு சக்கர வாகனத்திற்கு 20 ரூபாய் வசூல் செய்வதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மறியல் நடைபெற்றது.  புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள நகராட்சி சார்பில் ஒப்பந்தக்காரர்களுக்கு விடப்பட்ட கழிப்பறைக்கு 10 ரூபாய் வசூல் செய்வதையும் இரு சக்கர மோட்டார் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒரு வாகனத்திற்கு 20 ரூபாய் வசூல் தொடர்ந்து வசூல் செய்யும் ஒப்பந்தக்காரர்களை நகராட்சி கண்டு கொள்ளாததை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இன்று முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கழிப்பறை மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்களை மூடும் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக காவல்துறையினர் மாவட்ட செயலாளரை நேற்று இரவு கைது செய்துள்ளனர் மேலும் கட்சி நிர்வாகிகள் அரசு பழைய பொது மருத்துவமனை சிக்னல் அருகே திடீரென்று சாலை மறியல் செய்தனர் பொது பிரச்சனைகளை கையில் எடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்வதை கண்டித்தும் மேலும் கழிப்பறைக்கு 10 ரூபாய் மற்றும் இரு சக்கர மோட்டார் வாகனம் நிறுத்தும் இடத்தில் இருபது ரூபாய் அதிக வசூல் செய்வதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர் ஆலங்குடி சாலை ஆயுதப்படை மைதானம் மேலராஜவீதி புதிய பேருந்து நிலையம் ஆகிய நான்கு வழிகளிலும் செல்லும் வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சாலை மறியல் செய்த கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர் இதனால் அந்த அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
Tags:    

Similar News