தருமபுரியில் சாலை பாதுகாப்பு வார விழா
தருமபுரியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ஓட்டுநர்கள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் தருமபுரியிலுள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
கூட்டத்தில் தருமபுரி மாவட்ட லாரி ஓட்டுநர்கள், தனியார் பேருந்து ஓட்டுநர்கள், தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள், டெம்போ, கார், ஆட்டோ, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். சாலையில் வாகனங்களை எவ்வாறு பாதுகாப்புடன் இயக்குவது, ப்ரேக் பிடிப்பது எவ்வாறு, மது அருந்தியோ போதை பழக்க வழக்கங்களுடன் ஏன் வாகனங்களை இயக்க கூடாது, சாலை விதிகளை எவ்வாறு பின்பற்றுவது, போக்குவரத்து சிக்னல்களை எவ்வாறு கடைபிடித்து வாகனங்களை இயக்குவது, வேகத்தை கட்டுபடுத்தி வாகனங்களை இயக்குவது, ஒரு ஒரு வாகனத்திற்கும் மற்றொரு வாகனத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு இயக்க வேண்டும்
மலைப்பகுதிகளில் எவ்வாறு வானகங்களை கவனமாக இயக்குவது, மற்றும் விபத்தில்லாமல், பாதுகாப்பாக எவ்வாறு இயக்குவது உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் ஓட்டுநர்களுக்கு எ டுத்து கூறப்பட்டது.. நிகழ்ச்சியின் இறுதியில் ஓட்டுநர்கள் சாலை பாதுகாப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர், தாமோதரன் தருமபுரி மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் திரு. நாட்டான்மாது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்