இரண்டு ஆண்டுகளாகியும் சாலை பணி முடியலை

தில்லையாடியில் 2 ஆண்டுகளாக தார் சாலை போடாமல் ஜல்லி கற்களோடு நிறுத்தப்பட்ட சாலை, பெயர்ந்து சேதமடைவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Update: 2024-05-09 04:31 GMT

 தில்லையாடியில் 2 ஆண்டுகளாக தார் சாலை போடாமல் ஜல்லி கற்களோடு நிறுத்தப்பட்ட சாலை, பெயர்ந்து சேதமடைவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.  

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தில் கிராமசாலைகள் மேம்பாடு திட்டத்தில் தெற்கு வீதி சந்திப்பிலிருந்து சார்ந்தாரை காத்த சுவாமி கோயிலுக்கு செல்லும் சாலை அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் 200 மீட்டர் தூரம் உள்ள சாலை பணியில் செம்மண் மற்றும் ஜல்லிகள் நிரப்பப்பட்டு கப்பி கற்களால் சாலை போடப்பட்டு தார் சாலை போடாமல் கிடப்பில் போடப்பட்டது. கப்பி கற்களால் ஆன சாலை போடப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில் கருங்கல் ஜல்லிகள் முற்றிலும் பெயர்ந்து சேதமடைந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், அந்த பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால்’ இரவு நேரத்தில் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் கப்பிகற்கள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ள சாலையில் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்., இதேபோல் தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலை, சவுக்கடித் தெரு உள்ளிட்டப் பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு தார் போட்டு சாலை அமைக்காமல் 6 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அதிக அளவில் புழுதி பறப்பதால் பல வகையில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து செம்பனார்கோவில் ஓராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது 200 மீட்டர்தூரம் உள்ள சாலை தார் சாலை போடுவதற்கான நிதி ஒதுக்காததால் கருங்கல் கப்பிகற்களால் போடப்பட்டது. தற்போது தார்சாலை அமைப்பதற்கான நிதி உள்ளதாகவும் கிடப்பில் போடப்பட்ட இரண்டு சாலைகளிலும் 15 நாட்களில் தார் சாலை போடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News