சாலை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை!
செங்கம் அருகே சாலை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Update: 2024-05-31 04:21 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா மேல்படூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 60), நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளர். இவர் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.