சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை

கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-27 02:05 GMT

சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதி காணிமடம் என்ற இடத்தை சேர்ந்தவர் கண்ணன் (60). இவர் நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளார். கடந்த 23ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணிக்கு கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்றிருந்தார். இதற்கிடையே 25ஆம் தேதி அதிகாலை வீட்டின் மாடியில் ஆள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அந்த பகுதி காவலாளி போன் செய்து கண்ணனை கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவரிடம் தகவல் கொடுத்து வீட்டிற்கு சென்று பார்க்கும் போது தெரிவித்துள்ளார். இதை அடுத்து அக்கம் பக்கத்தினர்  சென்று பார்த்தபோது, வீடு திறந்து வீட்டுக்குள் அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன. இது குறித்து அவர்கள் கண்ணனிடம் தெரிவித்தனர். அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோக்கள் திறந்து கிடந்தன.

அதிலிருந்து சுமார் 6 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு சுமார் 1.25 லட்சம் இருக்கு என கூறப்படுகிறது.  சம்பவம் தொடர்பாக அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News