மரக்காணத்தில் கூரை வீடு எரிந்து 2 லட்சம் பொருட்கள் நாசம்
மரக்காணத்தில் கூரை வீடு எரிந்து 2 லட்சம் பொருட்கள் நாசம். போலீசார் விசாரணை.;
Update: 2024-03-26 17:00 GMT
தீ விபத்து
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட 7 வது வார்டில் உள்ள கலைஞர் நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி செல்வம் வயது 45. இவரது வீட்டை பூட்டிவிட்டு நேற்று வழக்கம் போல் செல்வமும் அவரது மனைவி உமா ஆகிய இருவரும் வேலைக்கு சென்று உள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் எதிர்பாராத விதமாக அவரது கூரை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கூரை வீடு முற்றிலும் தீப்பற்றி எரிந்து வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சமையல் பாத்திரங்கள் பத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் இருந்து நாசமாகி உள்ளது. இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.