சேலத்தில் ஓட்டலில் ரூ.1¼ கோடி மோசடி: சகோதரர்கள் கைது

சேலத்தில் ஓட்டலில் ரூ.1¼ கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-04-25 14:46 GMT

கோப்பு படம் 

சேலம் அண்ணா பூங்கா பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் சேலம் அண்ணா பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- எனது ஓட்டலில் வரவு, செலவு கணக்கு சரி பார்க்கும் போது ரூ.1 கோடியே 36 லட்சம் மோசடி நடந்து இருப்பது தெரிய வந்தது. இந்த மோசடியில் ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்த திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த பரணிதரன் மீது சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து மோசடி நடந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனிடையே இந்த மோசடி வழக்கில் பரணிதரன் (வயது 38), அவருடைய தம்பி பாலமுரளி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News