வெளிநாட்டில் வேலை என்று ரூ 2.75 லட்சம் மோசடி 

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் வெளிநாட்டு வேலை வாங்கிதருவதாக கூறி மோசடியில் ஈடுப்பவர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-28 01:14 GMT
மோசடி

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவருக்கும் ராதாபுரம் பண்ணையார்குளம் வடக்கு தெருவை சேர்ந்த சங்கர் மகன் மணிகண்டன் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு டிராவல்ஸ் உரிமையாளர் மூலம் அர்மீனியா நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாவை மணிகண்டன் பிரவீன் பழக்கத்தின் பேரில், கடந்தாண்டு ஜூலை மாதம் 30 ஆம் தேதி முதல் பல தவணையாக பணத்தை செலுத்தியுள்ளார்.

பணத்தை மார்த்தாண்ட டிராவல்ஸ் உரிமையாளர் அவரது மனைவியின் வங்கி கணக்கில் கூகுள் பே மூலம் பெற்றுள்ளார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி அர்மீனியா நாட்டிற்கு செல்வதற்கு ஒரு விமான டிக்கெட் கொடுத்துள்ளார். அங்கு ஒரு ஏஜெண்டை பார்க்குமாறும் அவர் விசா தருவதாகவும் ட்ராவல்ஸ் உரிமையாளர் கூறியுள்ளார். அங்கு சென்றபோது ஒரு மாட்டுப் பண்ணையில் வேலைக்கு வைத்துள்ளனர். 5 நாள்கள் கழித்து எந்த வேலையும் கொடுக்கவில்லை. 21 நாட்கள் கடந்ததும் விசிட்டிங் விசா காலாவதியானதால், மணிகண்டன் சொந்த பணத்தில் சொந்த ஊர் திரும்பி உள்ளார்.

அதன்பிறகு மார்த்தாண்டம் வந்து டிராவல்ஸ் உரிமையாளரிடம் வேலை அல்லது பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து மணிகண்டன் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News