விழுப்புரத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.30 லட்சம் பறிமுதல்

விழுப்புரம் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.30 லட்சம் பணத்தை தேர்தல் கண்காணிப்பு குழு கைப்பற்றியது.

Update: 2024-03-20 10:34 GMT

தேர்தல் கண்காணிப்பு குழு

விழுப்புரம் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.30 லட்சம் பணத்தை தேர்தல் கண்காணிப்பு குழு கைப்பற்றியது. விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையம் சோதனை சாவடியில் தேர்தல் கண்காணிப்பு குழு உரிய ஆவணங்களின்றி ரூ.30 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ., விடம் ஒப்படைத்துள்ளனர்.

விழுப்புரம் பாராளுமன்ற தனி தொகுதியில் கண்காணிப்பு குழு வாகனங்களை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இன்று காலை 1 மணியளவில் கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் கண்காணிப்பு குழு 3 அலுவலர் சக்திவேலு தலைமையிலான குழுவினர் அவ்வழியாக சென்ற காரில் சோதனை செய்தபோது உரிய ஆவணங்களின்றி ரூ.30 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. உடனடியாக அதனை கைப்பற்றிய கண்காணிப்பு குழுவினர் (ஆர்டிஓ) உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

அதன்பின்னர் விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் தென்னவராயன்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் அன்பழகன்(33) இவர் மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீமணக்குள விநாயகர் கல்லூரியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் எப்போதும்போல் கல்லூரியில் வசூல் செய்த பணத்தினை ரூ.30 லட்சத்தை காரில் எடுத்துக் கொண்டு, விழுப்புரத்தில் உள்ள தனியார் வங்கியில் டெபாசிட் செய்வதற்க்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. அதன்பின்னர் உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு எடுத்துச் செல்லூமாறு தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News