விபத்தில் இறந்த எஸ்.எஸ்.ஐ க்கு ரூ.34 லட்சம் காப்பீடு
விபத்தில் இறந்த எஸ்.எஸ்.ஐ க்கு ரூ.34 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டது
By : King 24x7 Website
Update: 2023-12-13 06:15 GMT
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் அருகே நாவலுாரை சேர்ந்தவர் செல்வராஜ், 53. ஆத்துார் ஊரக போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். இவருக்கு மனைவி ராஜேஸ்வரி, 2 மகன்கள் உள்ளனர். கடந்த மே, 20ல், பைக்கில் தலைவாசலில் இருந்து காமக்காபாளையம் வழியே சென்றபோது விழுந்ததில் படுகாயம் அடைந்தார். ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்கு மே, 24ல், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் ஜூன், 3ல் உயிரிழந்தார். இறந்த எஸ்.எஸ்.ஐ., செல்வராஜின் சம்பளக் கணக்கை, தனியார் வங்கியில் வைத்திருந்தார். அந்த வங்கியில், காப்பீடுக்கும் பிடித்தம் செய்யப்பட்டது. இதனால், 34 லட்சம் ரூபாய்க்குரிய காசோலையை, ராஜேஸ்வரியிடம், சேலம் எஸ்.பி., அருண்கபிலன் நேற்று வழங்கினார். ஆத்துார் டி.எஸ்.பி., நாகராஜன் உடனிருந்தார்.