ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.5 லட்சம் பறிமுதல்
கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பைக்கில் எடுத்துச் சென்ற ரூ. 5 லட்சம் பணத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-13 06:18 GMT
உளுந்தூர்பேட்டை தொகுதி நாச்சியார் பேட்டை அருகே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு தோட்டக்கலை உதவி இயக்குனர் முரளி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த திருக்கோவிலுாரை சேர்ந்த தினேஷ், 29; என்பவர் ஓட்டி வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்களிலின்றி ரூபாய். 5 லட்சம் பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. அதன்பேரில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து, உளுந்தூர்பேட்டை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.