திமுக மாநாட்டுக்கு வந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.7லட்சம் நிதியுதவி
திமுக மாநாட்டுக்கு வந்து வலிப்பால் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.7லட்சம் நிதியுதவியை அமைச்சர் மெய்யநாதனும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் வழங்கினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-26 14:00 GMT
நிதியுதவி அளித்த அமைச்சர்
மயிலாடுதுறையை சேர்ந்த திமுக தொண்டரான தங்கப்பிரகாசம் என்பவர் சேலம் ஆத்தூரில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றவர், வலிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தவர் இறந்துள்ளார்.
அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன் ரூ.4 லட்சமும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ ரூ.3 லட்சமும் தங்கப்பிரகாசம் குடும்பத்திற்கு நிதி உதவி செய்தனர்.