சேலம் ராஜகணபதி கோவிலில் ரூ.14.31 லட்சம் உண்டியல் காணிக்கை

சேலம் ராஜகணபதி கோவிலில் ரூ.14.31 லட்சம் உண்டியல் காணிக்கை இருந்தது.

Update: 2024-04-25 09:18 GMT

காணிக்கை எண்ணும் பக்தர்கள்

சேலம் டவுன் கடைவீதியில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவிலில் 4 உண்டியல்கள் உள்ளன.

இந்நிலையில், நேற்று காலை ராஜகணபதி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு சுகவனேசுவரர் கோவிலில் வைத்து எண்ணப்பட்டன. தர்மபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், ராஜகணபதி கோவில் உதவி ஆணையர் ராஜா ஆகியோர் முன்னிலையில் தன்னார்வ தொண்டர்கள், கோவில் ஊழியர்கள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

முடிவில், ரூ.14 லட்சத்து 31 ஆயிரத்து 441 ரொக்கமும், 11 கிராம் தங்கம், 135 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும், அமெரிக்கா டாலர் 2 நோட்டுகளும், கத்தார் ரியால் 4 நோட்டுகளும் இருந்தது என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News