ரூ.50 ரூபாய் தள்ளுபடி; பிரியாணிக்கு அலைமோதிய மக்கள் கூட்டம்

ஆண்டிபட்டியில் பிரியாணிக்கு ரூ.50 தள்ளுபடி அளிக்கப்படுவதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2024-02-05 12:45 GMT

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி நகரின் மையப்பகுதியில் அரசு மருத்துவமனை எதிரே தாய் பாஸ்ட் புட் என்ற உணவகம் இன்று முதல் பிரியாணி விற்பனை செய்வதாக அறிவித்தது இக்கடையில் இன்று காலை 11.30மணிமுதல் மூன்றுமணி வரை 100 ரூபாய் பிரியாணி 50 ரூபாய்க்கு லெக்பீசுடன் தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என சுவரொட்டிகள் மூலம் ஆண்டிபட்டி நகர் முழுவதும் கடந்த சிலநாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தது/

இதனால் இன்று காலை முதலே பிரியாணிக்கடை முன்பு பிரியாணியை குறைந்த விலையில் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் கூடியது இந்நிலையில் காலை 11.30 மணிக்கு பிரியாணி வழங்குவதாக அறிவித்திருந்தும் மதியம் ஒரு மணி வரை கடையில் பிரியாணி வழங்கவில்லை மேலும் கடையும் திறக்காமல் அடைக்கப்பட்டிருந்தது இதனால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதவே தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது இந்நிலையில் இரண்டு மணிநேரம் கழித்து ஐம்பதுரூபாய் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது இத்தகவல் அறிந்த மக்கள் கூட்டம் அதிகமாக கூடியதையடுத்து மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் பிரியாணியை வாங்குவதற்காக ஒருவரை ஒருவர் முண்டியடித்து சென்று கடைக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த இடத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆண்டிபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முறையாக விற்பனையை ஒழுங்கு படுத்தாத கடைக்காரரை கண்டிக்காமல் பிரியாணி வாங்கவந்த பொதுமக்களை மிரட்டியும் அடிப்பது போன்று கைகளை ஓங்கி அச்சுறுத்தியும் அங்கிருந்து விரட்டினர் இதனால் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது மேலும் 50 ரூபாய் பிரியாணி வாங்க அலைமோதிய கூட்டத்தால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News