உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.77 ஆயிரம் பறிமுதல்
தாராபுரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.77 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Update: 2024-03-30 04:49 GMT
தாராபுரம் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை கண்காணிப்பு குழு தலைவர் சசிகலா தலைமையிலான அதிகாரிகள் தாராபுரம் பகவான் கோவில் ரோட்டில் செட்டியார் புதூர் அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த தேனி மாவட்டம் குப்பநாயக்கன்பட்டியை அடுத்த துரைசாமி புரத்தைச் சேர்ந்த அர்ஜுனன் ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 27 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர் பின்னர் அந்த பணம் வட்டாட்சியர் கோவிந்தசாமிடம் ஒப்படைக்கப்பட்டது