ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க கொடியேற்று விழா
பாபநாசத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க கொடியேற்று விழா நடந்தது.
Update: 2024-07-02 07:49 GMT
பாபநாசம் தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் தமிழ்நாடு ஊரவளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க கொடி ஏற்று விழா ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் இளங்கோவன் விஸ்வநாதன் ரவி ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் ஏசுதாஸ் கலந்து கொண்டு கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் பொறுப்பாளர்கள் சீனிவாசன், ரமேஷ், சங்கர், சண்முகம், ஐயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாபநாசம் புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பன்னீர் செல்வன் நன்றி கூறினார்