நாகை கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை
நாகை கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
நாகை கடலோர பகுதி களில் பாதுகாப்பு. ஒத் திகை நடந்தது. அப் - போது தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற 12 பேர் பிடிபட்டனர். கடலோர பாதுகாப்பு ஒத்திகை மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத் திய தாக்குதலுக்கு பிறகு, மத் திய அரசு கடலோர மாவட் டங்களில் 'சாகர் கவாச்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்தி கையை நடத்தி வருகிறது. ஆண்டுக்கு 2 முறை இந்த கடலோர பாதுகாப்பு ஒத் திகை நடத்தப்படுவது வழக் கம். அதன்படி தமிழகம், புதுச் சேரி மாநில கடலோர பகுதிகளில் நேற்று காலை 6 மணிக்கு கடலோர பாது காப்பு ஒத்திகை தொடங்கியது.
இந்த ஒத்திகையில் இந் திய கடற்படை, இந்திய கட லோர காவல் படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர். மீனவர்களுக்கு அறிவுறுத்தல் ஒத்திகையை யொட்டி நாகை கடலோர பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடல் பகுதியிலும், கடற்க ரையோர பகுதியிலும் சந்தே கப்படும்படியான நபர்களின் நடமாட்டம் ஏதேனும் இருந்தால் அதுகுறித்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்கு மாறு கடலோர பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கடலுக்கு சென்று மீன்பிடித்து வரும் மீனவர்களிடமும் சந் தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் பற்றி தெரியவந் தால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கண்காணிப்பு பணி அதேபோல பொதுமக்கள் கூடும் வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலை யம் உள்ளிட்ட இடங்களில் - உள்ளூர் போலீசாரும் கண் - காணிப்பு பணியில் ஈடுபட்ட 5 னர்.தமிழக பாதுகாப்பு குழுமபோலீசார் நாகூர் பட்டினச் சேரிக்கு கிழக்கே 4 நாட்டிக் கல் தொலைவில் சந்தேகத் துக்கு இடமளிக்கும் வகையில் விசைப்படகில் வந்த 3 பேரி டம் விசாரணை செய்தபோது அவர்களிடம் எந்த ஒரு ஆவ ணங்களும் இல்லாதது தெரிய வந்தது. 12 பேர் கைது அதேபோல நாகையில் இருந்து 4 நாட்டிக்கல் தொலைவில் 2 பைபர் பட கில் வந்த 6 பேரும், வேளாங் கண்ணியில் இருந்து 3 நாட் டிக்கல் தொலைவில் விசைப் படகில் வந்த 3 பேரும் என மொத்தம் 12 பேர் பாதுகாப்பு ஒத்திகையின்போது தீவிரவா திகள்போல் ஊடுருவ முயன்றது தெரியவந்தது.
இவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைது செய்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று (வியாழக்கிழமை ) மாலை 6 மணி வரை நடக் கிறது. வேதாரண்யம் நாகை மாவட்டம் வேதா ரண்யத்தில் கடலோர பாது காப்பு குழுமதுணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர், சப்- இன்ஸ்பெக்டர் வரலட்சுமி மற்றும் போலீசார் படகு மூலம் கடல் பகுதியில் ரோந்து சென்று ஒத்திகையில் ஈடுபட் டனர். மீனவ கிராமங்களான வெள்ளப்பள்ளம், புஷ்பவ னம், நாலுவேதபதி, கோடியக் கரை, மணியன்தீவு உள் ளிட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து பாது காப்பு ஒத்திகையை மேற் கொண்டனர். சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நடமாட்டம் தெரிந் தால் உடனடியாக தெரிவிக் கும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.