சேலம் நகரசபை கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

நகரசபை இயல்பு கூட்டத்தில் திமுகவுடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

Update: 2024-02-16 14:59 GMT
நகர சபை கூட்டத்தில் தகராறு

கெங்கவல்லி:ஆத்தூர் நகரசபை இயல்பு கூட்டம்அதன் தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் தலைமையில் நடந்தது.

கூட்டத்திற்கு துணைத்தலைவர் கவிதா ஸ்ரீ ராம், ஆணையாளர் சையது முஸ்தபாகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியவுடன், அ.தி.மு.க. கவுன்சிலர் உமாசங்கரி மோகன் எழுந்து ஆவேசமாக பேசினார். அவர் பேசும் போது, ”ஆத்தூர் நகரசபையில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. நகரசபை அலுவலர்கள், துப்பு ரவு பணியாளர்களுக்கு 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை.

நிதிநிலைமை கடும் மோசமான நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஆத்தூர் நகராட்சியின் வருவாய் ஆதாரத்தை வைத்து 4 கோடி ரூபாய் செலவில் மின் விளக்கு, தெரு விளக்கு வசதிகள் அமைக்கப்பட உள்ளதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது இது தேவையா..? நகராட்சியில் எந்த ஒரு பணிகளும் நடைபெறுவதில்லை.இவ்வாறு அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே தி.மு.க. கவுன்சிலர் தங்கவேல் மற்றும் அவருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கூட்டத்தில் 15 நிமிடம் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. அ.தி.மு.க. கவுன்சிலர் உமா சங்கரி மோகனுக்கு ஆதரவாக, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆவேசமாக பேசினார். தொடர்ந்து குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட எந்த வசதிகள் கேட்டாலும் செய்து தரப்படவில்லை எனக்கூறி அ. மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Similar News