பேராவூரணியில் சலங்கை பூஜை விழா

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அமிர்தம் திருமண மஹாலில் ஸ்ரீ நீவி நடனப்பள்ளி சார்பில், முதலாவது சலங்கை பூஜை விழா நடைபெற்றது.

Update: 2024-05-06 12:04 GMT

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அமிர்தம் திருமண மஹாலில் ஸ்ரீ நீவி நடனப்பள்ளி சார்பில், முதலாவது சலங்கை பூஜை விழா நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அமிர்தம் திருமண மஹாலில் ஸ்ரீ நீவி நடனப்பள்ளி சார்பில், முதலாவது சலங்கை பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்துப் பேசினார்.  தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆர்.சிங்காரம் ஆகியோர் நடனப்பள்ளி குழந்தைகளை வாழ்த்திப் பேசினர்.

  இதில் மாணவிகள் பூர்வ தர்ஷிகா, பிரித்திகா, கீதாஞ்சலி, ஐஸ்வர்யா, தஷ்மிகா, சாதனா, இனிய பிரசன்னா ஸ்ரீ ஆகியோரின் நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.  முன்னதாக பேராசிரியை முத்துக்குமாரி ஜெகதீசன் வரவேற்றார். நிறைவாக நடனப் பள்ளி ஆசிரியை வைஷ்ணவி நன்றி கூறினார்.  இதில், இலக்கியப் பேச்சாளர் அ அப்துல் மஜீத், பேராவூரணி வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.பி. ராஜேந்திரன், அமுதம் பில்டர்ஸ் கந்தசாமி, குமரப்பா சிபிஎஸ்சி கல்விக் குழும புல இயக்குனர் அஸ்வின் கணபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News