சென்னையில் 392 அம்மா உணவகங்க பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு!!
சென்னையில் செயல்பட்டு வரும் 392 அம்மா உணவகங்களில் பணிபுரியும் 3,100 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2024-07-04 03:54 GMT
amma unavagam
சென்னையில் சுமார் 392 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு 300 ரூபாய் தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுமார் 392 அம்மா உணவகங்களில் பணிபுரியும் 3,100 ஊழியர்களுக்கு 300 ரூபாயிலிருந்து 325 ரூபாயாக உயர்த்தப்பட்ட தினக்கூலியை வழங்கும்படி அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜூன் மாதத்திலிருந்து ஊதிய உயர்வு அமல்படுத்தப்படும் என்றும் ஏப்ரல் மற்றும் மே மாத அரியர்ஸ் தொகையும் சேர்த்து விடுவிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.