கள்ளச்சாராய விற்பனை - பெண்கள் உட்பட 5 பேர் கைது
கீழ்பென்னாத்தூர் அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 525 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீஸார் கடந்த சில தினங்களாக கீழ்பென்னாத்தூர் பகுதியில் தீவிர சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாராயம் விற்றகவும், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாகவும் கீக்களூர் காலனி பகுதியைச் சேர்ந்த கலா (60), பானு (61), அலெக்சாண்டர் (25), கீக்களூர், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அஞ்சலை (45), வழுதலங்குணம், புது காலனி பகுதியைச் சேர்ந்த லதா (50), கத்தாழம்பட்டு ஏரிப் பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் (50) ஆகியோரிடம் இருந்து மொத்தம் 525 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.
இதுதொடர்பாக, கலா,மொத்தம் 525 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். இதுதொடர்பாக, கலா, பானு, அலெக்சாண்டர், அஞ்சலை, லதா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான விஜயராஜை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பெண்கள் உள்பட 5 பேரும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.