காரிமங்கலம் வார சந்தையில் தேங்காய்கள் விற்பனை மந்தம்
காரிமங்கலம் தேங்காய் வார சந்தையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அதிக அளவிலான வியாபாரிகள் தேங்காய்களை வாங்க வராததால் வர்த்தகம் மந்தம்.
Update: 2024-04-09 04:50 GMT
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, காரிமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை பிரபலம். மேலும் தேங்காய்கள் விற்பனைக்காக பிரத்தியேகமாக ஒரு நாள் முன்னதாக திங்கட்கிழமை மதியம் முதல் தேங்காய் சந்தை நடை பெறும். நேற்று நடந்த சந்தையில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் மற்றும் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து குவித்தனர். சுமார் 1 லட்சம் தேங்காய்கள் கொண்டு வரப் பட்டிருந்தது. அளவைப் பொறுத்து ஒரு தேங்காய் 7 ரூபாய் முதல் 11 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் நேற்று ஒரே நாளில் 10 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தை காட்டிலும் தேங்காய் வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப் பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக வியாபாரிகள் அதிகளவில் வராததால் தேங்காய் சந்தை மந்தமாக காணப்பட்டது.