வாரச்சந்தையில் தேங்காய் விற்பனை ஜோர்
காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ. 12 லட்சத்திற்கு தேங்காய்கள் விற்பனையாகின.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாட்களில் மதிய நேரத்தில் தேங்காய்கள் விற்பனைக்காக பிரத்தியேகமாக தேங்காய் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் நேற்று பிற்பகல் கூடிய வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்போது பண்டிகை காலங்கள் ஊர் திருவிழாக்கள் துவங்கியுள்ளதால் தேங்காய் விற்பனை சூடு பிடிக்க துவங்கியது நேற்று அளவு மற்றும் ரகத்தைப் பொறுத்து ஏழு ரூபாய் முதல் 12 ரூபாயில் வரையில் ஒரு தேங்காய் விற்பனை செய்யப்பட்டது. மேலும் மொத்தமாக நேற்று ஒரே நாளில் 12 லட்சத்திற்கு தேங்காய் பால் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.