ஆத்தூரில் ரூ.48 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

சார் புதுப்பேட்டை வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 1807 பருத்தி மூட்டைகள் ₹48 லட்சத்திற்கான வர்த்தகம் நடைபெற்றது.

Update: 2024-04-22 14:26 GMT

விற்பனைக்கு வந்த பருத்தி மூட்டைகள்

சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், நத்தக்கரை, திட்டக்குடி, ராமநாயக்கன் பாளையம், கள்ளக்குறிச்சி பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 316 விவசாயிகள் 1807 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

ஆத்தூர், திருப்பூர், திருச்சி, சேலம், கோவை பகுதியைச் சேர்ந்த 16 வியாபாரிகள் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்திருந்தனர். இந்நிலையில் பி.டி.ரகம் குவிண்டால் ரூ.7,089 முதல் ரூ.7,899 வரை, டி.சி.ஹெச்., ரக குவிண்டால் ரூ.9,159 முதல் 10,869 ரூபாய் வரை, கொட்டு பருத்தி (கழிவு) 3, 589முதல் 6,168 வரை விற்பனையானது. பருத்தி ரூ.48 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags:    

Similar News